ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஸ்டாலின் மகள் வீட்டில் திடீர் ரெய்டு.! இதற்கெல்லாம் பயந்து இருந்தால் திமுக என்றைக்கோ காணாமல் போய் இருக்கும்.!துரைமுருகன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். அதே போல் அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது. ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும்.
தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல. கண் துடைப்புக்காக அதிமுகவினரின் இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது. திமுகவை பயமுறுத்தவே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.