ஜாக்டோ–ஜியோ போராட்டம்: பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவு!!



jacto geo


பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு நிலையில், தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் போராட்டத்தை தொடர்பவர்கள்  பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கை பிறப்பித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

jacto geo

இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 1,584 ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருக்கிறது.

அதேபோல் சில ஆசிரியர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக இடமாற்றம் செய்து இருக்கிறார்கள். எனவே மாணவர்கள் நலன் கருதி அந்த ஆசிரியர்கள் மீதும் எடுக்கப்பட்ட பணிமாறுதல் நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், காவல் துறையில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்டு இருக்கும் வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறினார்.