"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு! டி.டி.வி.தினகரன் இரங்கல்! அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், பிறந்த அன்பழகன் 1967 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகனை நேரில் பார்த்து, அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 7, 2020
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த பேராசிரியர் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அன்பழகனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,"தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.