மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்.. கைதான ஆசிரியைகள் முன்னிறுத்திய ஒரு தகவல்.! ஏற்க மறுத்த நீதிபதி.! ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி ஜூலை 13-ம் தேதி சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செல்வி அளித்தார்.
அவர் அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நேற்று 4-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் கைதான ஐந்து பேர் சார்பில் முன்னுறுத்திய தகவலில், 4000 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.