மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவறவிட்ட செல்போனில் காதல் வளர்த்து, வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம்; 17 வயது சிறுமி கர்ப்பம்..!
11ம் வகுப்பு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டான்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், பைத்தந்துறை புதூர் காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இவர் 11ம் வகுப்பு படித்த நேரத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் பேருந்து நிறுத்தத்தில் செல்போன் கேட்பாரற்று இருந்ததை கண்டறிந்துள்ளார். அதனை சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகன் குமணனிடம் (வயது 22) கொடுத்துள்ளார். குமணன் செல்போனுக்கு உரியவர் ஆவார்.
அதனைத்தொடர்ந்து, சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய குமணன், நாட்கள் சென்றதும் காதல் வலை வீசி இருக்கிறார். இருவரும் செல்போனில் பேசி காதல் வளர்த்து வந்த நிலையில், கடந்த செப். மாதம் 20ம் தேதி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, தாய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் சிறுமி 11 வார கர்ப்பமாக இருப்பது உறுதியானது.
சிறுமியிடம் விசாரித்தபோது காதல் வலைவீசி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகவே, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் குமணன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு போக்ஸோவில் சிறையில் அடைக்கப்பட்டான்.