மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் அடிதடி சண்டை.. பரபரப்பு வீடியோ லீக்..!
அரசுப்பள்ளி மாணவர்கள் 2 குழுவாக பிரிந்து சண்டையிட்ட சம்பவம் மக்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் திடீரென இரண்டு குழுவாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பேருந்து நிலையத்திற்கு அருகேயே இருதரப்பாக பிரிந்து தாக்கிக்கொண்டுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள் மாணவர்களை எச்சரித்த நிலையில், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மாணவர்களை எச்சரித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த நிலையில், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.