மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் செய்த பகீர் செயல்.. பதறிப்போன உறவினர்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் மகன் அமுல் ராஜ் (வயது 24). இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் கடந்த 4 வருடமாக வரன் பார்த்து வந்துள்ளனர்.
ஆனால், அமுல்ராஜுக்கு வரன் சரியாக கிடைக்காத நிலையில், அவர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த அமுல்ராஜ், வீட்டில் விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவே, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அமுல்ராஜ் பரிதாபமாக நேற்று பலியானார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.