மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏரி மண் கொள்ளையால் துயரம்; ஏரியில் குளிக்கச்சென்ற 2 சிறார்கள் பரிதாப பலி.! பெற்றோர்களே கவனம்.!!
மழை நேரங்களில் சிறார்களை ஏரி, குளம் போன்ற நீர் நிரம்பிய இடங்களுக்கு செல்ல அனுமதிப்பது விபரீதத்திற்கு வழிவகை செய்யலாம் என்பதால் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet), செங்குறிச்சி கிராமம், நேரு வீதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரின் மகன் துரைப்பாண்டி என்ற அரவிந்த் (வயது 13). இவர் அங்குள்ள குமாரமங்கலம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார்.
அதேபோல, செங்குறிச்சி பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரின் மகன் செல்வகுமார் (வயது 11). இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
அரவிந்தும் - செல்வகுமாரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள் இருவரும் நண்பகல் 12 மணியளவில் செங்குறிச்சி ஏரியில் குளிக்கச்சென்று, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவர்களை தேடியபோது, இருவரின் சடலமும் ஏரியில் மிதந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவர்களின் உடலை மீட்டு ஏரிக்கரையில் கிடத்தி கதறியழுதனர்.
தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர், சிறார்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, சிறார்கள் உயிரிழந்த தகவல் கிராமத்தினரிடையே தெரியவரவே, அவர்கள் மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்தினர். மேலும், ஏரியில் மண் திருடி கொள்ளையில் ஈடுபட்டதே சிறார்களின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.