மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொதித்தெழுந்த நடிகர் கமல்! ஆவேசமாக வெளியிட்டுள்ள வீடியோ.
திருமண விழா ஒன்றிற்காக ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் லாரி ஏறி பரிதாபமாக உயிர் இழந்தது அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை கூறிவரும் நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து நடிகர் கமலகாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை ஆவேசமாக பதிந்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இந்த உலகில் மிகப்பெரிய கொடுமையான விஷயங்களில் ஓன்று வாழவேண்டிய பிள்ளை இறந்துவிட்டது என்று பிள்ளைகளுடைய மரண செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான். சுபஸ்ரீயின் மரணமும் அப்படிப்பட்டதுதான்.
இதுபோன்ற மரணங்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியம்தான் காரணம் என கமல் கூறியுள்ளார். மேலும், எங்கு பேனர் வைக்கவேண்டும், வைக்க கூடாது என்று என்பது கூடவா உங்களுக்கு தெரியாது என கடுமையாக விமர்சித்துள்ளார் கமல்.
இதோ அந்த வீடியோ.
தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக
— Kamal Haasan (@ikamalhaasan) September 20, 2019
மாற வேண்டும். pic.twitter.com/RQgaiORiHc