தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கமல்ஹாசன் ஏன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.? இது தான் காரணமாம்.!
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அப்போது நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு எனது ஒரே குறி சட்டமன்ற தேர்தல் தான்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல் போட்டியிடவில்லை என்று கூறி விட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் முழுவதும் போட்டியிட்டு 3.73 சதவீத வாக்குகளை பெற்றது.
கமல்ஹாசன் முதலில் சென்னை ஆலந்தூர் அல்லது கோவை தெற்கு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது இரண்டிலுமே போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்தநிலையில் நேற்று கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், 1,45,082 ஓட்டுகளை பெற்று, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தார். இதன் காரணமாக தான் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என அரசியல் வட்டாரத்த்தில் பேசப்படுகிறது.