மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுபஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முன்னணி நடிகர்! வைரல் புகைப்படம்.
கடந்த சில நாட்களாக மக்களை கொந்தளிக்க செய்த விஷயங்களில் ஒன்றாக இருந்தது சுபஸ்ரீயின் மரணம். திருமணத்திற்காக ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் விழுந்ததில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் பின்னல் வந்த லாரியில் சிக்கி மரணம் அடைந்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த மரணம் குறித்து பல்வேறு விவாதங்கள் சென்றன. அணைத்து கட்சிகளும் இனி முறையான அனுமதி இன்றி பேனர் வைக்க கூடாது என்ற தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த மரணம் குறித்து நடிகர் கமல் பிக்பாஸ் மேடையில் பேசியிருந்தார்.
மேடையில் பேசியதோடு மட்டுமே இல்லாமல் நேரில் சென்று சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் கமல். கமல் மட்டும் இல்லாது பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினரும் சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவருகின்றனர்.