மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BIGBREAKING: காவலரை அரிவாளால் வெட்டிய ரௌடி மீது துப்பாக்கிசூடு; காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!
காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த ரௌடி அரிவாளால் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டிகை, எருமையூர் பகுதியில் குற்றவழக்கில் தொடர்புடைய பிரபல ரௌடி சச்சின் என்பவன் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரௌடி சச்சினை சுற்றிவளைக்கவே, காவலர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த சச்சின் காவலர் பாஸ்கர் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளான்.
இதனால் ரௌடியை எச்சரித்த அதிகாரிகள், சரணடையுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதனை கேட்காத ரௌடி தாக்குதல் முயற்சியில் இறங்கவே, காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் சச்சினின் கால்களில் 2 முறை சுட்டு அவனை கைது செய்துள்ளார்.
துப்பாக்கி குண்டுகளுடன் படுகாயமடைந்த ரௌடி சச்சின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த காவலர் பாஸ்கருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் காலை நேரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.