மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனிமொழி இப்படி செய்வார் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.!திடீரென கட்டிபிடித்ததால் திக்குமுக்காடிய பெண்.!
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுக்க நடந்து வருகிறது. இதில் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழியும் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில், 'விடியலைத்தேடி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சியின் 3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து மூன்றாவது நாளாக பென்னாகரம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி. அப்போது ஏரியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் பேசிய அபிதா என்ற பெண், எங்கள் பகுதியில் பட்டியலின பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர். தற்போது கூட உங்களை வரவேற்று ஆரத்தி எடுக்க மாற்று சாதியை சேர்ந்த பெண்கள்தான் இருந்தனர். எங்களை ஒதுக்கி வைக்கின்றனர் என குமுறலுடன் கூறியுள்ளார் அந்த பெண்.
இதனைப் பார்த்த கனிமொழி உடனடியாக ஓடிவந்து அந்தப் பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டார். இதனையடுத்து பேசிய எம்பி கனிமொழி, சமூகத்தில் ஒதுக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் என்ற நிலையிலிருப்பது, நமது பணியை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. வருகிற திமுக ஆட்சி இந்த பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காக பாடுபடும் எனத் தெரிவித்தார்.