மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலை கொடுத்த முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதல்; தட்டிக்கேட்ட தொழிலதிபர் கொலை முயற்சி.. ஓடஓட நடந்த பயங்கரம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல், பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவிலில் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலதிபரின் வீட்டில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்துள்ளார்.
இவருக்கு சமீபத்தில் கண் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கார் ஓட்டுனருக்கும் - தொழிலதிபரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தை அறிந்த தொழிலதிபர் சகாய ஜேன்பிரை கண்டித்த நிலையில், வேலையில் இருந்தும் நிறுத்தி இருக்கிறீர். இதனால் ஆத்திரமடைந்த சகாய ஜெனிபர், பள்ளிவிளை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தொழிலதிபரை அரிவாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
உயிர்தப்பிய தொழிலதிபர் சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் சகாய ஜெனீபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.