மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காம லீலையின் மன்னனாக வலம்வந்த பாதிரியார் பெனடிக் ஆண்டோ கைது; தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
பெண்களை மயக்கி உல்லாச வாழ்க்கை நடத்தி 80 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காம பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் பெனடிக் ஆண்டோ. இவர் தனது தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வரும் பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இவ்வாறாக வாட்சப் குழுவை தொடங்கி பெண்களை தனது வலையில் வீழ்த்திய பெனடிக் ஆண்டோ, பெண்களுடன் நிர்வாண வீடியோ கால் பேசி காம லீலைகள் செய்துள்ளார். பின்னர், விடியோவை பதிவு செய்து மிரட்டி 80 க்கும் மேற்பட்ட பெண்களிடம் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.
பாதிரியாரின் காம லீலைகள் தொடர்பான விஷயங்கள் சமீபத்தில் ஒவ்வொஒன்றாக விடியோவுடன் சமூக வலைத்தளங்களில் பரவின. பாதிக்கப்பட்ட பெண்களில் 3 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகாரும் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது உண்மை அனைத்தும் அம்பலமானது. பாதிரியாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, அவர் தலைமறைவாகவே காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று பெனடிக் ஆண்டோ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே மொத்தமாக உண்மையில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் தெரியவரும்.