மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் ஆணழகனின் உயிரை குடித்த மதுப்பழக்கம்.. கண்ணீரை விவரிக்கும் சோக தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). இவர் கடந்த 2015 ஆம் வருடம் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று, அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோஹித் என்ற பெயரில் ஜிம்மும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று காலையில் மாஸ்டர் ஜெயக்குமார் தனது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற நிலையில், அங்கிருந்த இளைஞர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
உடற்பயிற்சி செய்ததால் மயங்கி விழுந்திருக்கலாம் என்று நினைத்தவர்கள் தண்ணீர் கொடுத்து எழுப்ப முயற்சிக்க, அவரின் மீது மதுபான வாடகை தெரிந்ததால் மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதி செய்தனர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விசயம் தொடர்பாக வடசேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ஜெயக்குமார் விஷம் கலந்த மதுவை குடித்து உடற்பயிற்சி செய்தவாறு உயிரிழந்தது அம்பலமானது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க ஆசைப்பட்ட ஜெயக்குமார், கடந்த சில மாதமாகவே மது போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டாம் தேதி அதிக மது போதையில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்த, ஜெயக்குமார் சம்பவத்தன்று காலையில் விஷம் கலந்து மதுவை குடித்துவிட்டு கடைசியாக உடற்பயிற்சி செய்யலாம் என்று சென்று உயிரை மாய்துகொண்டது அம்பலமானது. இவர் முன்னாள் ஆணழகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.