மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறவினருடன் மனைவி கள்ளக்காதல்.. தட்டிக்கேட்ட கணவனின் மண்டை உடைப்பு.. பரபரப்பு சம்பவம்.!
கணவரின் சித்தி மகனுடன் மனைவி கள்ளக்காதல் வைத்திருந்த நிலையில், தட்டிக்கேட்க சென்ற கணவனின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் கருங்கல் அருகே நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல், பெருமான்குழி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி அர்ச்சனா. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
அர்ச்சனாவுக்கு கணவருடைய சித்தி மகன் செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் ராஜேஷ் வீட்டில் இல்லாத சமயத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்றும் கள்ளக்காதல் ஜோடி அர்ச்சனாவின் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளது.
இந்த விஷயம் ராஜேஷுக்கு தெரியவரவே, அவர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், செந்திலின் வீட்டிற்கு சென்று ஜன்னலை உடைத்து, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த செந்தில் வீட்டிற்கு வந்துவிட, செந்தில் - ராஜேஷ் கடுமையாக சண்டையிட்டுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷின் தம்பி ரவிக்குமார், சகோதரருக்கு ஆதரவு தெரிவித்து செந்திலை அடித்து நொறுக்கியுள்ளார். செந்தில் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் அவரை விரட்டி சென்றுள்ளனர். அப்போது, செந்திலின் அண்ணன் மகன் தினேஷ் மரக்கட்டை மற்றும் செங்கலை எடுத்து ராஜேஷ், ரவிக்குமாரை தாக்கியுள்ளார்.
பதில் தாக்குதல் சம்பவத்தில் ராஜேஷ், ரவிக்குமார் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியுள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வர செந்தில் மற்றும் தினேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். காயமடைந்த ராஜேஷ், ரவிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.