மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிப்பதாக ஏமாற்றி, 14 வயது சிறுமியை 2 நாட்கள் வீட்டில் அடைத்து பலாத்காரம்.. இளைஞன் கொடூர செயல்.!!
14 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி, நண்பனின் வீட்டில் வைத்து அவரை பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது. இளம் சிறுமிகள் பருவ காதலால் சந்திக்கும் சோகம் தொடர்கதையாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம், பொன்மனை அருகே இருக்கும் கிராமத்தில் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 14 வயது மகளும், 12 வயது மகனும் பிள்ளைகளாக உள்ளனர். 14 வயதுடைய சிறுமி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமி தினமும் தனது பள்ளிக்கு வீட்டில் இருந்து நடந்து சென்று வந்துள்ளார்.
நாகர்கோவில் தெற்கு சூரங்குடி, கீரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரின் மகன் வினோத். இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 4 ஆம் தேதி சிறுமியின் பள்ளி அருகே சவாரிக்கு வந்த வினோத், சிறுமியை தனது பேச்சால் நட்பு வலையில் வீழ்த்தி இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி சிறுமியை பின்தொடர்ந்து வந்த வினோத், தனது காதலை வெளிப்படுத்தி நாடகமாடி இருக்கிறார். கயவனின் நாடகத்தை புரிந்துகொள்ளாத சிறுமியும், பதின்ம வயதில் ஏற்படும் பருவ கோளாறால் காதலிப்பதாக கூறி இருக்கிறார். இதனையடுத்து, இருவரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சிறுமியை பொன்மனை சந்திப்புக்கு நேரில் வரச்சொல்லி அழைக்கவே, சிறுமியும் பாட்டி வீட்டிற்கு சென்று வருகிறேன் என கூறி சென்றுள்ளார். இருவரும் தனியாக பேசலாம் என சிறுமியை நயவஞ்சக எண்ணத்துடன் அழைத்து சென்ற வினோத், சாஸ்தாகோவில்விளை பகுதியில் உள்ள நண்பர் ராஜுவின் வீட்டிற்கு கூட்டிச்சென்றார்.
அங்கு சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், 2 நாட்களாக வீட்டில் இருந்து சிறுமியை வெளியே அனுப்பாமல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், உனக்கு 18 வயதானால் திருமணம் குறித்து யோசிக்கலாம் என்று தெரிவித்து, அவரை வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
பருவ காதலில் விழுந்து பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, மனதுடைந்த நிலையில் சோர்வாக வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமியை கவனித்த அவரின் தாய் விசாரிக்கையில் உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வினோத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.