மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 இளம் பெண்கள்.. கழிவறையில் ரகசிய கேமிரா.. சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளர் குறித்த பகீர் தகவல்கள்!
பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்திய சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரின் வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ளே பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த சஞ்சு (29) என்பவர் செட்டிகுளம் பகுதியில் z3 இன்ஃபோடெக் என்ற சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை சமீபத்தில் தொடங்கி, அந்த நிறுவனத்தில் மூன்று இளம் பெண்களை வேலைக்கும் அமர்த்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் பெண் ஒருவர், கழிவறைக்கு சென்றபோது அங்கு வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு, அது என்ன என்ற பார்த்தபோது அது ரகசிய கேமிரா என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மற்ற பெண் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மற்ற பெண்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சஞ்சுவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் சஞ்சு முன்னுக்கு பின் முரணாகவும், அந்த பெண்களை மிரட்டும் தோனியிலும் பதிலளித்துள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து போலீசார் சஞ்சுவை கைது செய்து அவரிடம் இருந்த லேப்டாப், செல்போன், ஹார்ட்டிஸ்க், ரகசிய கேமிரா ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், கழிவறையில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக தனது செல்போனில் பார்க்கும் விதமாக சஞ்சு கேமிரா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சஞ்சுவுடன் சேர்த்து அவரது நண்பர்கள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும், அதனை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறிக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.