மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வி.சி.க நிர்வாகி மகனிடம் பணம் பறிப்பு.. வாக்குவாதம் கொலையில் முடிந்து, தாய், தந்தையை எண்ணி மகள்கள் தற்கொலை முயற்சி.!
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் மகனிடம் பணம் பறித்த தகராறு, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது. காவல் துறையினர் தாய், தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்ததால், வி.சி.க நிர்வாகியின் மகள்கள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சோகம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கீழ ஊரணி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவருக்கும் நிஷாந்த் என்ற 21 வயது மகனும், அஸ்மிதா என்ற 23 வயது மகளும், நிவேதா என்ற 20 வயது மகளும் உள்ளனர்.
நிஷாந்த் தேவகோட்டை பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வரும் நிலையில், கடந்த சில மாதமாக அமராவதிபுதூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுமார் (வயது 44) என்பவர், நிஷாந்தை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரின் தொந்தரவு தாங்க முடியாத நிஷாந்த், தனது தந்தையிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கணேசன் மற்றும் அவரது நண்பர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பணம் பறித்தது தொடர்பாக குமாரை கண்டித்து இருக்கின்றனர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணேஷ் குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னர், சோமநாதபுரம் காவல் துறையினர் கணேசன், சுந்தர மூர்த்தியை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த நிஷாந்தை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், கணேசனின் மனைவி தேன்மொழி மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாய், தந்தையின் மீது காவல் துறையினர் கொலைவழக்குப்பதிவு செய்ததால் விரக்தியடைந்த அஸ்மிதா மற்றும் நிவேதா, வீட்டில் விஷம் குடித்து மயங்கி இருந்துள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வி.சி.கவினர் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டுள்ளனர்.