மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவலைக்கிடமான நிலையில் கருணாநிதி; தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 6 மணிக்கு மூட உத்தரவு
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த சில மணி நேரங்களாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. மிகத் தீவிரமான சிகிச்சை அளித்த போதும் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து வருகிறது” என்று கூறியுள்ளது.
காவேரி மருத்துவமனை அருகே 300 போளீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்து போலீஸார் சென்னைக்கு வர வேண்டும் என சுற்றறிகை காவல் துறையால் விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்நிலையில் அனைத்து போலீஸாரும் பணிக்கு திரும்புமாறு காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.