ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
கரூர் +2 மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.!! உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் செய்த பகீர் காரியம்..!!
கரூர் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை விவகாரத்தில், அவரின் டைரியில் இருந்து குறிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தற்கொலைக்கு காரணம் யார்? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
கரூர் நகரில் உள்ள அரசு காலனி பகுதியை சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை கடிதத்தில், "பாலியல் தொல்லை காரணமாக நான் தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் மரணிக்கும் இறுதி பெண்ணாக நான் இருக்க வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கவும் பயமாக உள்ளது" என தெரிவித்து இருந்தார்.
பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் தற்கொலை மற்றும் கடிதம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்கு முன்னர் தான் கோயம்புத்தூரை சார்ந்த மாணவியும் தற்கொலை செய்திருந்தார் என்பதால், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆதங்க குரல்கள் எழுப்பப்பட்டன. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது யார் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் (வயது 42), நேற்றிரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் கிராமம், குப்புச்சிபாளையம் பகுதியை சார்ந்த ஆசிரியர் சரவணன், திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் செங்காட்டுப்பட்டியில் இருக்கும் மாமனார் நடராஜன் இல்லத்தில் தற்கொலை செய்தார்.
இதனால் மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர் சரவணன் காரணமாக இருக்கலாம், கைதுக்கு பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று எண்ணப்பட்ட நிலையில், துறையூர் காவல் துறையினரால் ஆசிரியர் சரவணனின் டைரி கைப்பற்றப்பட்டது. இந்த டைரியில், "நான் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என மாணவர்கள் சந்தேகித்து கிண்டல் செய்கிறார்கள். இதனால் என்மனம் உடைந்துபோனது. நான் அனைவரையும் விட்டு பிரிந்து செல்கிறேன். மிஸ் செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதமும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வெங்கமேடு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர் காரணமாக இருக்கமாட்டார் என மாணவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. அதிகாரிகளால் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.