35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சாரே.. கடைசியா ஒரு கட்டிங் போட்டு வந்துடுறேன் - தப்பி சென்ற கைதி பகீர் வாக்குமூலம்.!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட கைதி சரக்கடிக்க தப்பி சென்று மீண்டும் அதிகாரிகள் வசம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலை, இஞ்சிவிளையை சேர்ந்தவர் சாக்கன் பாபு (வயது 49). இவர் மனைவியை கொலை செய்த வழக்கில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை குழித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 2 கேரள காவல் துறையினர் பாபுவை பேருந்து மூலமாக அழைத்து வந்தனர். குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கைதியின் கைவிலங்கு அகற்றப்பட்ட நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி பாபு தப்பி ஓடியுள்ளான்.
அதிகாரிகள் அவனை விரட்டி சென்றும் பிடிக்க இயலாத நிலையில், மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை, கேரள எல்லைப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபு எங்கும் சிக்காத நிலையில், நாகர்கோவில் பகுதியில் பாபு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தப்பி சென்ற கைதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.
விசாரணையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த பாபு சிறையில் இருக்கும் போது மது கிடைக்காமல் தவித்துள்ளார். இதனால் நீதிபதி முன் ஆஜர்படுத்தும் சமயத்தில் கைவிலங்கை அவிழ்த்த போது திட்டமிட்டு தப்பி சென்று, உறவினரின் வீட்டிற்கு சென்று ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி சரக்கு வாங்கி மற்றொரு உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போதுதான் காவல் துறையினர் பாபுவை கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்திற்கு பாபுவை அழைத்து சென்ற அதிகாரிகள் மது அருந்த குற்றவாளி தப்பி சென்றுவிட்டதாக தகவல் அறிக்கை பதிவு செய்து வழங்கியுள்ளனர்.