மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#KGPChapter2: அதிரடி., சரவெடி.. கே.ஜி.எப் 2 படம் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த்.. கொண்டாட்டத்தில் படக்குழு.!
யாஸீன் கே.ஜி.எப் 2 ஆம் பாகத்தினை பார்த்த ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி கே.ஜி.எப் 2 ஆம் பாகம் வெளியானது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா உட்பட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கே.ஜி.எப் 2 ஆம் பாகத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி இருக்கிறார். மேலும், யாஷ் உட்பட படக்குழுவுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.