வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கவுசல்யா!. சர்ச்சையால் அவரது அரசு பணிக்கு ஆப்பு!!



kowsalya suspended


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 2016 ல்  காதல் திருமணம் செய்து கொண்டார். 

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி பட்டப்பகலில் உடுமலையில் வைத்து சங்கர் மற்றும் கெளசல்யா இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து சங்கரின் தந்தைக்கு அரசு வேலையும், கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. ஆணவக்கொலை என்ற காரணத்தால் கெளசல்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

kowsalya

இதனையடுத்து, கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்ற வாலிபரை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். பின்பு அவர் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவர் என்று சர்ச்சை எழுந்ததால் அவரை விட்டு பிரிந்தார்.

இந்நிலையில், தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்காக எதிராக பேசி உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் எவ்வாறு இப்படி பேசலாம் என்ற சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் வெலிங்டன் அரசுப்பணியில் இருந்து கெளசல்யா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.