மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் - மகள் திடீர் தற்கொலை.. கண்ணீரில் கதறிய கணவன்.. நெஞ்சை உலுக்கும் பரிதாபம்.!
கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் தாயும் - மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் ஓசூர் அருகே நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், அண்ணாநகரை சேர்ந்தவர் மகபூப் பாஷா. இவர் ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் எலக்ட்ரிக் கடையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி நூர்ஜஹான் (வயது 38). தம்பதியின் மகள் மோஷின்ஜான் (வயது 17). சிறுமி 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில், கம்பியூட்டர் வகுப்பு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு மகபூப் பாஷா இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், நூர்ஜஹான் தனது மகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டிற்கு மீண்டும் வந்த பாஷா, கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
அப்போது, தனது மனைவி மற்றும் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து ஓசூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.