சிறுமியை சீரழிக்க கள்ளகாதலனுக்கு உடந்தையாக இருந்த அண்ணி.. 2 வருடமாக பெருந்துயரம்...!



Krishnagiri Uthangarai Near Village Sister in Law Helps to Affair Man Sexual Abuse Minor Girl

கள்ளக்காதலனுக்கு சிறுமியை அறிமுகம் செய்து, பாலியல் வன்கொடுமைக்கு அண்ணி உடந்தையாக இருந்த பகீர் சம்பவம் ஊத்தங்கரை அருகே நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை விஸ்வாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ். இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இவர், இதே பகுதியில் ஐ.டி.ஐ பயின்று வந்த மாணவியை, கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை அலெக்சின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை தேடி வருகின்றனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் படி, சிறுமியின் அண்ணி சார்லி, அலெக்ஸுடன் கள்ளக்காதல் உறவு வைத்துள்ளார். கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அலெக்சின் பார்வை சிறுமியின் மீது திரும்பியுள்ளது. 

Krishnagiri

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளகாதலியின் உதவியை பெற்ற அலெக்ஸ், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு அண்ணியாக இருந்த சார்லியே கொடூர செயலுக்கு உடந்தையாக இருந்த நிலையில், மிரட்டலால் சிறுமியும் செய்வதறியாது இருந்துள்ளார். 

இதனால் ஒருவித மன பயம் மற்றும் வெறுப்புடன் சிறுமி இருந்து வந்த நிலையில், சிறுமியின் தந்தை மனநல மாற்றத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் உண்மை அம்பலமாகியுள்ளது. தற்போது சார்லி மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அலெக்ஸுக்கு வலைவீசப்பட்டுள்ளது.