தமிழக பாஜக தலைவராக முருகன் நியமனம்! யார் அந்த முருகன்?



l-murugan-head-as-a-tamilnadu-bjp-head

தமிழக புதிய பாஜக தலைவராக எல் முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். முருகன், தேசிய SC ST ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக சென்ற பின். கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்ததது.

bjp

 

இந்தநிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு கடும் போட்டிகள் இருந்து வந்தநிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றி வரும் எல்.முருகன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட முருகன், தேசிய SC ST ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, எல்.முருகன் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்திருக்கிறார்கள். அதற்கேற்ப செயல்படுவேன். பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார்.