மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தை உலுக்கிய மாணவி லாவண்யா தற்கொலை.! மதமாற்றம் காரணமா.? அறிக்கையில் வெளிவந்த தகவல்
கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி லாவண்யா பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தாா். இதனையடுத்து விடுதி கண்காணிப்பாளர் கொடுத்த அச்சுறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகின.
இதனையடுத்து பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றமே காரணம் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த தற்கொலை குறித்து விசாரித்த தேசிய குழந்தைகள் நல ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை.
மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். உரிய பதிவின்றி செயல்பட்ட பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதேபோன்று உரிய பதிவின்றி எத்தனை பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.