மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் விவகாரம்.. தங்கையின் காதலனை கத்தியால் குத்திய சகோதரர்!
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வர். இவர் வேளச்சேரி உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்த விக்னேஷ்வரரை சிலர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ்வரை அருகில் கொண்டவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் விக்னேஷ்வர் அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி காதலை முறித்துக் கொண்டதும் தெரியவந்தது. ஆனால் விக்னேஷ்வர் அந்த மாணவியை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த மாணவியின் சகோதரர் அஜய் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சென்று விக்னேஷ்வரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.