மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிணற்றில் குதித்து தற்கொலை செய்த காதல் ஜோடி அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்!
தேனி அருகே பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்துகொள்ள காதல் ஜோடி முயன்ற நிலையில், காதலி மரக்கிளையில் சிக்கிக்கொள்ள காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அழகர்சாமி காலணி பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இரு வீட்டார் குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.
இதனால் சேர்ந்து வாழ முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து தேனி உழவர் சந்தை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அப்போது குதிக்கும் போது காதலி மட்டும் மரக்கிளையில் சிக்கிக்கொண்ட நிலையில், காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் மரக்கிளையில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.