35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!
எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற வார்த்தைகளை கேட்டு பழகிப்போன நமக்கு, தற்போதைய பிரச்சனை பெரிதாக தெரியப்போவதில்லை என்றாலும், ஒவ்வொருவரும் தனியே அரசியல் பகுத்தறிவு பெறவேண்டியதன் கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனம்.
தமிழ் செய்தி நிறுவனங்களில் பணியாற்றி, பின்னாட்களில் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்தவர் மதன் ரவிச்சந்திரன். இவர் அன்றைய பாஜக முக்கிய புள்ளியாக இருந்த கே.டி ராகவனின் அந்தரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். கே.டி ராகவன் தனக்கு அறிமுகமான பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.
அதனைத்தொடர்ந்து, பல பிரச்சனைகளை எதிர்கொண்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து விடியோவை வெளியிட்டார். பாஜகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கு இருக்கிறார்? அவருக்கு என்ன ஆனது என பல கேள்விகள் இருந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று Mars Tamilnadu என்ற You Tube சேனல் மூலமாக மாறுபட்ட தோற்றத்துடன் வெளிஉலகிற்கு தென்பட்ட மதன் ரவிச்சந்திரன், வீணா என்ற பெண்ணுடன் சேர்த்து தொடங்கிய Youtube சேனல் மூலமாக பல பாஜக முக்கிய புள்ளிகளின் முகத்திரையை கிழிக்க இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள் இருவரும் கூறுகையில், "மாவட்ட வாரியாக பெண்களை தவறாக அணுகிய பல பாஜக முக்கிய புள்ளிகள் முதல், பணம் வாங்கிக்கொண்டு தங்களை நடுநிலையாளர்கள் போல மக்களிடம் காண்பித்து, ஒரேநேரத்தில் பல அரசியல் கட்சிக்காக செயல்பட்ட Youtuber-கள் வரை என ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடியோவும் விரைவில் வெளியியிடப்படும். இவை ஒவ்வொன்றாக வெளிவரும்.
பாஜக தலைவர் அண்ணாமலை தொடக்கத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து எங்களிடமே பேசியிருக்கிறார். ஆனால், அவர் தலைமை பொறுப்பு ஏற்றதும் அவரின் மாற்றங்கள் அபரீதமானது.
YouTubeல் உங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை போல நடிப்பவர்கள் யாவரும் உண்மையானவர்கள் இல்லை. அவர்களை நம்பாதீர்கள்" என தெரிவித்துள்ளார். இது அரசியல் கட்சி தலைவர்களிடையே மட்டுமல்லாது, பல Youtube சேனல்களின் தலைமை பொறுப்பாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.