அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அன்றாட சம்பளம்..! கஷ்டப்படும் கூலி தொழிலார்கள்.! உதவி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி..! குவியும் வாழ்த்துக்கள்.!
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒருநாள் ஜனதா ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதனால் ரயில்கள், பேருந்துகள், வணிகநோக்கிலான கடைகள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 31 வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்திருப்பதால் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் பல்வேறு தொழிலார்கள் இதனால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள். இது தொடர்பாக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்த அவர், தனது ஒரு மாத ஊதியம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மேலும், நிரந்தர வருமானம் பெறுபவர்கள் இதுபோன்ற சமயங்களில் அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும் ஊழியர்களுக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நீதிபதியின் இந்த முயற்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.