மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் சுவரை துளைத்து திருடர்கள் செய்த பகீர் வேலை.! போலீசார் தீவிரம்.!
மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள பழவூர் பகுதியில் மது பாட்டில்கள் டாஸ்மாக் கடையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள பழவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு அங்கிருந்த சரக்கு பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் திருடப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பானது ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அங்கு வியாபாரம் செய்யப்பட்ட தொகை 5 லட்சம் டாஸ்மாக் ஊழியர்களால் வங்கியில் செலுத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பணம் தப்பியுள்ளது. அங்கிருந்த வெறும் ரூ.5 ஆயிரத்தை மட்டும் கொள்ளையடித்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர்.
இது பற்றி டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.