"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நெல்லையில் புரட்டி போட்ட கனமழை.! வெள்ள நீரில் மிதந்து வந்த ஆண் சடலம்.! பகீர் சம்பவம்!!
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் தரைத்தளத்தில் உள்ள வீடுகள், கடைகள் என அனைத்தும் முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு ஆண் நபர் ஒருவரது சடலம் வெள்ள நீரில் மிதந்து வந்துள்ளது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த நிலையில் அங்கு விரைந்த போலீசார் மிதந்து வந்த சடலத்தை கைப்பற்றி உயிரிழந்தது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.