மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்.! உடலில் சூடு வைத்து கொடூரம்.!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே முருங்கைகாடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்பெண்ணிற்கும் அவருடன் பணிபுரியும் பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
இந்தநிலையில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். அப்பெண்ணின் 15 வயது மகள் 10ம் வகுப்பு படித்துள்ளார். 10ம் வகுப்பு முடித்தபிறகு மகளை மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்கவைத்துள்ளனர். தாய் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியை மிரட்டி பலமுறை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி மறுப்பு தெரிவித்த நாட்களில் சிறுமியை அடித்து உதைத்தும், உடலில் பல இடங்களில் சூடு வைத்து கொடுமை படுத்தியுள்ளார் பிரகாஷ். இதை தாயிடம் சொன்னால், இருவரையும் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டிவந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி கொடுமை தாங்காமல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.