மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து கர்பமாக்கிய வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோழபுரம் அருகே கீழக்கள்ளூரைச் சோ்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் பசுபதி. 28 வயது நிரம்பிய இவா் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன்காரணமாக சிறுமி கர்பமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பசுபதியை கைது செய்தனா்.