மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய், மகனை கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த நபர்.! சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கொலையாளி.!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த குணசுந்தரிக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் மகேஷ் குமார் என்ற மகன் உள்ளார். உடல்நிலை கோளாறு காரணமாக குணசுந்தரியின் கணவர் மாரி இறந்தநிலையில், குணசுந்தரி கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த கொத்தனார் ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
ராஜுடன் திருமணமாகி ஒருமாதத்தில் ராஜின் கொடுமை தாங்காமல் கோபித்து கொண்டு குணசுந்தரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், குணசுந்தரியை பார்ப்பதற்கு மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்த ராஜ், மனைவி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குணசுந்தரி மற்றும் அவரது மகன் மகேஷ் குமார் ஆகிய 2 பேரை கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார் ராஜ். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியை 8 ஆண்டுகளாக தேடிவந்தனர்.
இந்தநிலையில், கொலையாளி ராஜ் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு தினமும் இரவு 7 மணிக்கு மேல் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் சிக்கன் பக்கோடா கடை அருகே மறைந்திருந்து கொலையாளி ராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.