மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை.! தட்டி தூக்கிய போலீஸ்.!
சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் அலறல் சத்தம் போத்தல் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் மறுநாள் மீண்டும் அதே வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். அந்த நபர் வீட்டிற்குள் நுழைவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டதால் அலறல் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரையும் கூச்சலிட்டு அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து மீண்டும் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர்.
அதில் அந்த பெண் வீட்டிற்கு நுழைய முயன்றவர் கொடுங்கையூர் பகுதியில் அரிசி மண்டி நடத்தி வரும் ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இதே போன்று பல பெண்களிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.