மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர் சம்பவம்.!! இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர்.!! கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்.!!
திருச்சி அருகே இளம் பெண் குளிப்பதை வாலிபர் ஒருவர் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகாரின் பேரில் அழகேஸ்வரன் என்ற 30 வயது இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன்(30). இவர் எடமலைப்பட்டி அருகே உள்ள ராமச்சந்திரா நகருக்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த திருமணம் ஆன இளம் பெண் ஒருவர் குளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
ஆளில்லாத சமயத்தை பயன்படுத்திய அழகேஸ்வரன் அந்தப் பெண் குளிப்பதை வென்டிலேட்டர் வழியாக தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வீடியோ எடுக்க முயன்ற அழகேஸ்வரனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அழகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்த எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் குளிப்பதை வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.