மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனவாய் போன வெளிநாட்டு வேலை.. கழுத்தை நெரித்த கடன் தொல்லை.!! வாலிபரின் சோக முடிவு.!!
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த நபர் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள முருகு விநாயகர் நகர் பகுதியில் சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடன் வாங்கி பணம் செலுத்தி வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அங்கு இருந்த கடுமையான பணி சுமை காரணமாக மீண்டும் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார் கௌதமன்.
கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி
வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு திரும்பியதால் அவருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்திருக்கிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்களும் தங்களது பணத்தை கேட்டு கௌதமனுக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். இதனால் கடுமையான மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்திருக்கிறார் கௌதமன்.
இதையும் படிங்க: 17 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி.!!
எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை
கடன் பிரச்சனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் தவித்த கௌதமன் கடந்த 27 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட குடும்பத்தினர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறை வழக்கு பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அங்கிள் வேண்டாம் ப்ளீஸ்.." +2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு.!! போலீஸ்காரர் கைது.!!