"நம்மள சந்தோசமா இருக்க விடமாட்டான்.." கணவனுக்கு சாயனைடு கலந்த மது.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!



woman-murder-her-husband-with-cyanide-mixed-liquor-4-ar

விழுப்புரம் அருகே கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலையில் இறந்து கிடந்த கொத்தனார்

டிசம்பர் 14ஆம் தேதி விழுப்புரம், இந்திரா நகர் சாலையில் மது போதையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் வீ.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்தது. மேலும் அவர் அதிக மது அருந்தியதால் உயிரிழந்ததாக காவல்துறையினர் கருதினர்.

tamilnadu

பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை

இந்நிலையில் மணிகண்டனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் சயனைடு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனின் மனைவியிடம் நடத்திய தீவிர விசாரணையில் தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தனது கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதையும் படிங்க: "ஐயோ கொன்னுட்டாங்களே..." துண்டான ரவுடி தலை.!! விலகாத மர்மம்.!!

கொலை செய்யத் திட்டம்

  கொத்தனார் மணிகண்டன் தனது மனைவி தமிழரசியுடன் சென்னையில் வசித்து வந்திருக்கிறார். அப்போது தமிழரசிக்கும் சென்னையைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டித்த மணிகண்டன் தனது மனைவியை விழுப்புரம் அழைத்து வந்து குடும்பம் நடத்தி இருக்கிறார். எனினும் தமிழரசி மற்றும் சூர்யா இடையேயான கள்ள உறவு தொடர்ந்திருக்கிறது. இதனை மணிகண்டன் கண்டித்ததால் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் தமிழரசி.

சயனைடு வைத்து கணவன் படுகொலை

தனது கணவனை கொலை செய்வது குறித்து கள்ளக்காதலன் சூர்யாவுடன் ஆலோசனை செய்திருக்கிறார் தமிழரசி. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் நண்பனான கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா மணிகண்டனை தொடர்பு கொண்டு கொத்தனார் வேலை இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி வேலைக்கு வந்த மணிகண்டனுக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்துள்ளனர். அதனை குடித்த மணிகண்டன் இந்திரா நகர் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இறந்த மணிகண்டனின் மனைவி தமிழரசி, கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா சீனுவாசன் மற்றும் கள்ளக்காதலன் சூர்யா ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் கார்த்திக் ராஜாவை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!