மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொண்டாட்டிய கொன்னத வெளில சொல்லவா.." போட்டு தள்ளிய ஹவுஸ் ஓனர் கள்ளக்காதல் ஜோடி.!! பரபரப்பு சம்பவம்.!!
கோவை மாவட்டத்தில் மனைவி கொலை செய்யப்பட்டதை வெளியே தெரிவித்து விடுவேன் என மிரட்டிய விசைத்தறி தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 7 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளங்கோவன்
கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான இளங்கோவன் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்காதல் ஜோடி கைது
மேலும் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டின் உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவரின் கள்ளக்காதலி கலைவாணி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அவர்கள் இருவரும் இணைந்து கூலிப்படை வைத்து இளங்கோவனை கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதல் ஜோடி கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: கலாட்டா கல்யாணம்... மணமகனின் தாய்க்கு கத்தி குத்து.!! தந்தை வெறி செயல்.!!
உண்மையை கூறி விடுவேன் என மிரட்டியதால் கொலை
இளங்கோவன் கொலை தொடர்பாக அமிர்தராஜ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில் அவருக்கும் கலைவாணி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் இளங்கோவன் உதவியுடன் தனது மனைவியை லாரி ஏற்றி கொலை செய்திருக்கிறார். இந்நிலையில் அமிர்தராஜ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இளங்கோவன் வாடகை கொடுக்க மறுத்திருக்கிறார். மேலும் தன்னிடம் வாடகை கேட்டால் மனைவியை கொலை செய்ததை வெளியே கூறி விடுவேன் என மிரட்டியதால், தனது காதலி கலைவாணியுடன் சேர்ந்து கூலிபடையை ஏவி இளங்கோவனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "எல்லாமே பணத்துக்காகவா... " காதலனை கொன்ற கள்ளக்காதலியின் வார்த்தை.!! ஆட்டோ டிரைவர் தற்கொலை.!!