மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிப்பதாக நாடகம்... 15 வயது சிறுமி கற்பழிப்பு.!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.!!
மதுரை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற சம்பவத்திற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
காதலிப்பதாக நடித்து சிறுமி பலாத்காரம்
கடந்த 2021 ஆம் வருடம் மதுரை கே.புதூரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய காளிதாஸ் அவரை பாலியல் பலாதாரம் செய்துள்ளார். இது தொடர்பாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகாரளித்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காளிதாசை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: "உன் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு.." கள்ளக்காதல் விவகாரம்.!! கோர முடிவு.!!
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
3 வருடங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்தது. அந்தத் தீர்ப்பின்படி சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த காளிதாசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு 1,15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை: கோவிலுக்கு சென்ற சகோதரிகளின் விதியை முடித்த எமன்; மணல் அள்ளிய பள்ளத்தில் சிக்கி துடிதுடித்து பலி.!