மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகள் குளிக்கும் போது திடீரென கேட்ட சத்தம்..! செல்ஃபோனுடன் ஓடிய மர்மநபர்..! செல்போனை பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!
இளம் பெண் குளித்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்த இளைஞரை பெண்ணின் தாய் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். ஆட்டோ ஓட்டிவரும் இவர் அயனாவரம் பகுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், வினோத் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்துவருகிறான்.
நேற்று எனது முதல் மகள் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது பாத்ரூமுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்றுபார்த்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் வினோத் என்ற இளைஞர் ஓட்டை வழியாக தனது மகள் குளிப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
உடனே வினோத்திடம் சண்டையிட்டு அவரிடம் இருந்த செல்போனை தான் பறித்துவைத்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வினோத்தின் செல்போனை சோதித்த போலீசார் அதில் வீடியோ இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.