மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 1 - 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 1 வாரம் கோடை விடுமுறைக்கு வாய்ப்பு...!
இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பறவையின் காரணமாக இருமல் காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் கொண்டிருந்த இளைஞர் மரணமடைந்தார்.
இதனால் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுவாக நாடாகும் இறுதி தேர்வுகளை விரைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
பொதுவாக ஏப்ரல் மாதம் 17ம் தேதி தேர்வு தொடங்கி 30ம் தேதி நிறைவு பெறும். ஆனால், காய்ச்சல் பரவல் காரணமாக, ஏப்ரல் 17ல் தேர்வு தொடங்கி 24ல் முடிக்கலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒருவாரம் கோடை விடுமுறை கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.