மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் வரலாற்றில் இல்லாத அளவு, 122 ஆண்டுகளுக்கு பின் பெரும் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளைய தினத்தில் பள்ளிகள்-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள சீர்காழி உட்பட பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் எங்கும் தண்ணீர் நிரம்பி உள்ளது.. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், அம்மாவட்டத்தில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். மீட்பு பணிகளும் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.