"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அரசு பேருந்து விபத்து.. மாணவிகள் உட்பட 60 பேர் படுகாயம்.!
காரைக்கால் நகரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வழியே பாண்டிச்சேரிக்கு 65 பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று இரவில் பயணம் செய்தது.
இந்த பேருந்து சீர்காழி அருகேயுள்ள காரைமேடு கிராமம் அருகே வருகையில், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் உட்பட 60 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.