மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை முதல் மிக கடுமையாக அமல்படுத்தப்படும் ஊரடங்கு! இறைச்சி, மீன் கடைகள் முற்றிலும் இயங்காது!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த முறை இருந்ததை விட இந்த ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறைச்சிக் கடைகளும் மீன் கடைகளும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதனால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சிக்கூடங்கள் நாளை முதல் மூடப்படவுள்ளது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சிக் கடைகளை 30-ந் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.