மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தமிழ்நாட்டின் முக்கிப்புள்ளி.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் காலமானார்; உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் பக்தர்கள்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருத்துவரில் தனியார் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பள்ளி உட்பட பல நிறுவனங்களை நடத்தி, ஆன்மீக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் பங்காரு அடிகளார்.
இவர் மேல்மருவத்தூர் பராசக்தி அம்மனின் மருவுருவமாக அவரின் பக்தர்களால் பார்க்கப்படுகிறார்.
மேல்மருவத்தூர் வரும் மக்களுக்கு எப்போதும் உதவி செய்யும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்த பங்காரு அடிகளாருக்கு தற்போது 80 வயது ஆகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அவர் காலமானார்.
அவரின் மறைவு பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பக்தர்கள் அதிகளவில் குவியமால் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, பின்னாட்களில் இறை பணிக்காக தன்னை அர்ப்பணித்த பங்காரு அடிகளார் சக்தியாக கருதப்படுகிறார்.
இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் முதன்மை சன்னதி மூடப்பட்டு இருக்கிறது. இவருக்கு தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் மன்றங்கள் திரளாக இருக்கின்றன என்பதால், மக்கள் கோவிலுக்கு வர தாற்காலிக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விஷயத்திலும், பல கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் அவ்வப்போது பங்காரு அடிகளாரை சந்திப்பது, அவரிடம் ஆசி பெறுவது என இருப்பது வழக்கம். பிரதமர் மோடி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்திருந்தார்.